உன் கைகள் கோர்க்கும் நொடிகள்
முதல் முறையாக உன்னுடன் கைகோர்தேன் என நினைத்த போது
உன்னுடைய கைகளுக்கும் என்னுடைய கைகளுக்கும் இடையில் சிறு பிரிவு இருப்பதை சில நேரம் உணர்தினாய்..
இரண்டாம் முறையாக உன்னுடன் கைகோர்தேன்.. இம்முறை சிறு காற்றும் இடையில் நுழைய முடியாமல் இருப்பதை உணர்தினாய்.
மகிழ்ச்சி பெருக்கெடுத்து ஓடியது
வானத்தில் பறப்பது போல தோன்றியது
நட்சத்திரகளை கையில் ஏந்தி இருப்பதை போல என்னற்ற மகிழ்ச்சி
மறுமுறையும் உன் கைகளை தேடியது என் மனம்..
மூன்றாம் முறையாக உன் கைக்கோர்க என் கைகள் காத்திருக்க....
வெகு நேரம்ஆக ஆக.. நெஞ்சம் பதற, கைகள் நடுங்க .. கண்கள் கலங்க தொடங்கின
இம்முறை உன்னையே காணவில்லை கைகோர்க... ஆனாலும் என் கைகள் உன் கைக்கோர்க காத்திருக்கிறது
அன்று மட்டுமல்ல .. இன்றும்.என்றும்!