நான் கண்டேனே

நான்
உன்னை கண்டேனே
எண்ணம் எல்லாம்
உன்னை கொண்டேனே!
தேன்
இதழ் கொண்டாயே
மோகம் தீர்க்க நீ வந்தாயே!
தாலாட்டும் உன்ஞாபகம் என்னை
வாலாட்டும் ஒருகுழந்தைப்போல் நெஞ்சம்
காலாட்டும் என் முன்னே நின்று காதலும்!
கண்ணாடிப் போல் அழகினை கண்டேன்
பின்னாடி தினம் நகர்ந்தே சென்றேன்
என்னாடி என்று நாளும் கேட்க மாட்டேன் நான்!
அமேஸான் போல்கூந்தல்
சஹாராவை போல் தேகம்
ஏஞ்சல்ஸ் அருவி கண்கள்-அடி
அழகியே...
மணமதை சூடிக்கொண்டால்
தினமும் வீழ்ந்து வெல்வோம்
மரகதப்பூவை செய்வோம்-தேன்
அருவியே!
மேகம் தேகம் சோகம்-உனை
கண்டவுடன்
நீராய் ஓடி பாம்பாய் சீரும்...
வீணாய் போகும் எந்தன்-இளம்
வயதுயது
உன்னை கண்டு யோகம் கொள்ளும்...
சின்ன சிலந்தி நம்மை-சிறை
பிடிக்கும் வரை...
நீயும் நானும் ஒன்றாய் ஒன்றி அணைத்துக்கொள்வோம்...
வண்ண பார்வையிலே-என்னை
வழிநடத்தி...
சாகும் நேரம் தூரம் வரையில்
கொண்டுவிடு...
காலங்கள் முழுதும் உன்னைநான்
கண்டேதான் நேரம் செல்லும்..
நீயில்லை என்றால் என்வாழ்வும்
தானாக பின்னே செல்லும்...
வாழ்வினில் சோகம் வேண்டாமென்றால்
நீயென் வாழ்வில் வேண்டும்...

எழுதியவர் : H.S.Hameed (26-Aug-20, 1:50 pm)
சேர்த்தது : HSahul Hameed
Tanglish : naan kandene
பார்வை : 68

மேலே