கண்ணன்
கண்ணன்தான் எல்லாமென அவனை மனதில்
உண்மையாய் இறுத்தி துதிப்போர்க்கு பகவான்
கண்ணன் காட்சிதருவான் துன்பமெல்லாம் தீர்ப்பான்
தன்னையே இறுதியில் வந்தடைய வழிவகுப்பான்
இடைச்சாதி சிறுவனும் அவனே அண்டமெல்லாம்
வியாபித்து இருக்கும் நாராயணனும் அவனே