அழகே அழகே
கொத்தாய் பூத்த குலையாய்க் காய்த்த
பெண் கொடி கண் முன் நின்றது
மானின் மருளல் என்னைக் கண்டதும்
முகத்தை மறைத்தது பனி மூட்ட நாணம்
நான் அதிகமாய் நோக்குவது கண்டு
இதழ்கள் முறைத்தன என்னை
மாங்கனியின் தேறிரண்டு
சுவை பிழிந்தது எனக்கு
அகன்றாள் பந்துபோல்
செம் மலர் மேனி துள்ள
நான் சித்தானேன் உடல் பித்தானேன்
அஷ்றப் அலி