ரயில்வண்டியில் ஒரு நாள்

ரயில்வண்டியில் ஒரு நாள்: தென்றல் காற்றோடு தென்காசி ரயில் நிலையத்தை அடைந்தது அந்த ஆட்டோ.தனது சுமைகளை சுமந்தபடி நடந்தார்கள்.."பூ வாங்கிக்கோமா" என்றது தள்ளாடிய பாட்டியம்மாவின் குரல்."வேண்டாம்மா" என்று சொல்ல மனமில்லாமல் தனது கணவனுக்கு பின்னால் பின் தொடர்ந்தாள்.."டிக்கெட்" வாங்கிட்டு இருக்கையில் அமர்ந்து ரயிலுக்காகக் காத்திருந்தார்கள்..ரயில் வரும் திசையை நோக்கியவளாய் கணவனின் முகத்தைப் பார்த்தவளாய் அமர்ந்திருந்தாள்.ரயிலும் வந்தது ஏறி தனது இருக்கையைப் பிடித்து அமர்ந்தார்கள்.."அவளது மனம் அந்த ரயிலுக்குக் கூடப் புரிந்ததோ என்னவோ அன்றைய தினம் மெல்லமாய் சென்றது"..ஜன்னல் ஓரமாய் இருந்த ஒரு பெண்மணி இடம் நகர அந்த இடத்தைப் பிடித்து அமர்ந்திருந்தாள்.அதிகாலை நேரம் நிகழ்வுகளை ரசித்தவளாய் பயணித்தாள்..ரயிலும் சென்றது மெல்லமாய்..தான் எதிர்பார்த்த ரயில் நிலையம் வந்தது.. "சிறுபிள்ளையில் ஓடி விளையாடிய ஒட்டு வீடு,வாசலில்"மியாவ்"என்று சத்தமிடும் அவளது செல்லப்பூனை,அன்று ஊஞ்சல் கட்டி தாலாட்டு பாடிய ஓங்கி வளர்ந்த ஒற்றை ஆலமரம்.."டீ வேணும்"என்று டீ வாங்கப் போகும் டீ கடை அண்ணனின் தலைகள் மட்டும் சற்றே வெளியே தெரிந்தபடி.. தன் புத்தகப்பையோடு நடந்த நடைபாதை..தோழிகளோடு விளையாடிய பள்ளிக்கூட விளையாட்டு மைதானம்.."எல்லாரும் உள்ள வாங்க" என்று அழைக்கும் பள்ளிக்கூட மணி சத்தம்..அத்தனை கதைகளும் பேசியவளாய்..ரயிலும் அவள் பாஷையில் மெல்லமாய் சென்ற ரயில் வேகமாய் சென்றது.அதுவரை சிரிக்காதவள் ரயிலின் வேகத்துக்கு பதில் சொன்னவளாய் புன்னகை புரிந்தாள்.. நினைவுகள் கொடுத்த"ரயில்வண்டிக்கு" நன்றி சொன்னவளாய் ..தனது கணவனின் பார்வைக்கு பதில் சொன்னவளாய்.. மீண்டும் மெளனமாய் பயணத்தைத் தொடர்ந்தாள்.

எழுதியவர் : ஆரோக்கியமேரி (30-Aug-20, 6:11 pm)
சேர்த்தது : ஆரோக்கியமேரி
Tanglish : sirukathai
பார்வை : 151

மேலே