நீ வருவாய் என
காதல் தென்றல்
நீ தான்யென்று
என் உள்ளத்தை
உன்னோடு
இணையவிட்டு
இறுதி மூச்சு வரை
என்னோடு...நீ....!
இருப்பாய்யென்று
எண்ணியிருந்தேன்...! !
ஆனால்...
நீயோ....
நாம் இணைய முடியாது
என்னை
மறந்து விடுங்கள்
மன்னித்து விடுங்கள்
என்று நீ சொன்ன
வார்த்தைகள்
சுழன்று வந்த
சூறாவளி காற்று
என்னை தண்டித்து
போனதென்று
எண்ணியபடி வெறும்
கூடாய் இருக்கிறேன்
நீ வருவாய் என
காத்திருக்கிறேன்...! !
--கோவை சுபா