அன்பின் வறுமை
வாயில்லா ஜீவன்களிடத்தில் காட்டப்படும்
அன்பு கூட - சில சமயங்களில்
நம் நெருங்கியவர்களுக்கு நம்மிடம்
தேவைப்படும் என்ற உணர்வில்லாமல் போகிறோம்......
நம் மனதில் அன்பெனும் உணர்வு குறைவதனால் ஏற்படும் - பஞ்சமே
அன்பெனும் வறுமை உருவாக காரணம்....
சரியான தருணங்களில் காட்டப்டும் அல்லது கொடுக்கப்படும்
அன்பானது நூறு மடங்காய் பெருகும்...
அன்பெனும் விதை விதைப்போம் - அதில்
மகிழ்ச்சி எனும் பூக்களை அறுவடை செய்வோம்...
அன்பெனும் வறுமையின்றி - நாம் பயணம் மேற்கொள்வோம்....