மௌனம்
மௌனம் ஆயிரம்
வார்த்தைகளுக்கு சமம்...
உண்மைதான்...! !
ஆனால்...
மௌனத்தால்.....! !
சொல்ல வேண்டிய கதைகளும்
சொல்ல மறந்த கதைகளும்
சொல்ல வேண்டிய காதலும்
சொல்ல முடியாத காதலும்
மனிதனின் மனதில்
புதைந்து கிடக்கிறது
ஆயிரம் காயங்களுடன்...! !
மௌனமாக இருப்பது
சிறந்த பாதையென்று
தவறாக நினைக்காதே...
சில இடங்களில்
நம் மௌனங்கள்
உண்மையை
ஊமையாக்கி
வாழ்கையை
ஊனமாக்கி விடும்....! !
பிதாமகன் பீஷ்மர்
மௌனம் காக்க
பாரத போர் பிறந்தது...
புத்த மகான்
மௌனம் துறக்க
போதனைகள் பிறந்தது...! !
எனவே
மௌனமாக இருக்கிறேன்
என்று சொல்லி ஊமையாக
இருக்க வேண்டாம் ...! !
--கோவை சுபா