தென்னையின் கண்ணீர்

தென்னையாகிய நான்
உந்தன் அன்னை !

சத்தியமும் செய்கிறேன்
உன்னை நித்தமும்
காப்பேன் என்று !

மழை , வெயில் எதுவாயினும்
மானிடா உன்னை
காக்கும் குடிலாவேன் !

நான் வாடாமல்
நீ காத்தால் - உந்தன்
நா வறடாமல்
நான் காப்பேன்..!

முக்கண்ணனின்
மற்றொரு ரூபம் நான் !
இறை வழிபாட்டில்
உனக்கு உதவியாவேன் !

பால் கொடுக்கும்
கனி நான் !

புரதத்தை கொடுக்கும்
என்னை புறக்கணிக்காதே..

எடுத்துக்கொள் - என் கனிகளை

உந்தன் பசியையும் போக்குவேன்!
சுவையையும் கூட்டுவேன் !

கொப்பரையானாலும்
குப்பையில் போவதில்லை !
கேசத்தின் குறைகளை
கேள்வி குறியாக்குவேன் !

தென்னந் தெழுவு - உனக்கு
தெம்பாக்கும் !

எந்தன் கருப்பட்டியோ
கட்டுடலை கம்பீரமாக்கும் !

சிரட்டை கொண்டு
சிறுவர் விளையாடியும்
நீராதாரம் உண்டும்
மகிழலாம்..

எந்தன் ஓலை கொண்டு
உந்தன் மூளை செயல்படுத்து !

எந்தன் நார் கூட
நாணாக !
குருத்து கூட
தோரணமாக !
முடி முதல்
அடி வரை
இருந்தும் - இறந்தும்
காப்பாற்றும் நான் …
உந்தன் அன்னைக்கு
நிகரானவள் !

என்னை அழிப்பது
எவ்வகையில் நியாயம் ?!

இப்படிக்கு,

இளநீர் கொடுக்கும் நான்
கண்ணீரோடு இங்கு !

எழுதியவர் : மொழிலினி (3-Sep-20, 11:16 am)
பார்வை : 81

மேலே