நான் தாயாக இருக்கிறேன்

நான் தாயாக இருக்கிறேன்

பல நூறு பழ மரங்கள்
இத்தனை இருந்தும்
நான் மட்டும்

தள தளவென்று
உயரமாய் வளர்ந்து
பல பல கிளைகள்
கொண்டு இருந்தும்

பூக்கிறேன் காய்க்கவில்லை
கனியாகவுமில்லை

மலட்டு மரம்
உரிமையாளன் சொல்லி விட்டு

ஆள் வைத்து வெட்ட
ஏற்பாடு செய்து விட்டான்.

வெட்ட வந்தவன்
கோடாரியை ஓங்கியவன்
அண்ணாந்து பார்த்து

ஐயா மேலே பாருங்கள்
உரிமையாளன் மேலே
பார்க்க

பல நூறு பறவைகள்
என் உடலில் கட்டியிருந்த
கூடுகளில் இருந்து எட்டி
பார்க்க

கூடவே
குரங்குகளும், அணில்களும்
மற்றும் பல பல

விட்டு விடு
சென்று விட்டான்
உரிமையாளன்

நான் காய்க்காமல்
போனால் என்ன?

இத்தனை உயிர்களுக்கு
தாயாக இருக்கிறேனே !
உரிமையாளனுக்கும்
சேர்த்துத்தான்

எழுதியவர் : தாமோதரன் ஸ்ரீ (4-Sep-20, 6:57 pm)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 70

மேலே