காரமர் மேனியனே கற்பக பூந்தருவே இன்றையத் துதி

காரமர் மேனியனே கற்பக பூந்தருவே
தாரமர் தேன்செண் பகச்சந் தனத்திருவே
ஊரவர் சங்கடம்தீர் நாயகா என்மனத்
தேரமர் இன்று மகிழ்ந்து !
கார் ---கருமுகில் தார் ---அணியும் மாலை
கற்பக பூந்தருவே --- கற்பக மரம் --நினைத்ததைக் கொடுக்கும்
சந்தனத்திருவே ----சந்தனம் மார்பில் பூசிய அழகனே
மனத்தேர் ---விளக்கம் தேவை இல்லை .
பா வடிவம் ---ஒருவிகற்ப இன்னிசை வெண்பா