மெல்லிய விரல்களால் மொட்டுக்களை மெல்ல வருடினாள்
மலர்களே அதோ பாருங்கள்
அவள் வருகிறாள் உங்கள் போட்டிக்காரி
என்று சொல்லிச் சென்றது தென்றல் !
மலர்ந்த பூக்களும் கோபத்தில் மீண்டும்
மூடிக்கொண்டு மொட்டுக்கள் ஆகி விட்டன
அவள் வந்தாள்
போட்டியும் இல்லை பொறாமையும் இல்லை
வேண்டுமென்றே சீண்டுகிறான் தென்றலன்
சொல்லப்போனால்
மலர்களும் மங்கையரும் ஒரே இனம்தான் !
தாவர இனத்தில் நீங்கள் மலர்
மனித இனத்தில் நாங்கள் மலர்
என்று மென்மையாகப் பேசி
தன் மெல்லிய விரல்களால்
மொட்டுக்களை மெல்ல வருடினாள்
மகிழ்ந்த மலர்கள் மகிழ்ச்சியில் மீண்டும் மலர்ந்து சிரித்தன
ஏன்
நாளை மலரவேண்டிய மொட்டுக்களும்
இன்றே மலர்ந்து விட்டன !!!
OH WHAT A WONDERFUL MAGIC TOUCH !