பூக்கள் யாருக்கு சொந்தம்
----------
தோட்டத்து பூக்கள்
தேனீக்கு சொந்தம்..
தென்றலுக்கு சொந்தம்..
காண்பவர் கண்களுக்கு சொந்தம்..
சுடும் சூரியனுக்கு சொந்தம்..
குளிரூட்டும் நிலவுக்கு சொந்தம்..
தலைவியின் தலையில்
தலைக்கனத்தோடு இடம் வலம்
ஊசலாடும் உயிர் பூக்கள்
தலைவிக்கு மட்டும் சொந்தம்..
தலைவி அனுமதித்தால்
தலைவனுக்கு சொந்தம்..
சிலநேரம் சினுங்கி
அடம் பிடித்து
இரு கை தூக்க
இடை பக்கவாட்டில் அமரும்
பிஞ்சுகளுக்கு சொந்தம்..
பருவம் கடந்து
தரையில் விழுந்த
பூக்களின் இதழ்கள்
மகரந்தம் காம்புகளெல்லாம்
மண்ணுக்கு மட்டும் சொந்தம்..
பூக்கள் எங்கு இருப்பினும்
அங்கு அழகு சேர்க்கும்..
ஆண்டவன் முதல்
மாண்டவன் வரை..
பூக்களை தாங்கி நிற்கும்
எந்த பொருளுக்கும்
எந்த மனிதனுக்கும்
தன்னிறைவு நிச்சயம்..
-----------
சாம்.சரவணன்