நம் உயிர் காதல்

உலகின் மறுபக்கத்தில் இருந்து
உன்னை காண ஓடோடி வருகிறேன்!


கடல்கள் பல தாண்டி..
காற்றோடு காற்றாக கலந்து..
கன்னி உன்னை காண
காதலன் நான் வருகிறேன்..
உன் உயிர் கொண்ட
காதலை மட்டும் சுமந்து கொண்டு..


தொலைதூரத்தில் இருந்த போது
தொடுதிரையினில் முகம் பார்த்து!
குறுஞ்செய்திகள் பல சமைத்து!
காலம் நேரம் தெரியாமல் கதைத்து!
காதல் செய்த என்னை
தொடும் தொலைவினில் கண்டதும்
வாயடைத்து போய் நிற்கிறாள்..
வார்த்தைகள் எல்லாம் விற்றுத்
தீர்த்து விட்டாள் போல!!!


அன்பே!
என்னோடு நீ பேச
வாய்மொழி ஒன்று தேவையா?


கண்ணே என்
கண் பார்த்து பேசடி
காதல் மொழி கொண்டு...


பெண்ணே!
உன் இமைகள் பேசும்
வார்த்தைகள் யாவும்
என் இதயத்திற்க்கு புரிந்து விடும்...


நம் இமைகள் பேசும்
காதல் மொழிக்கு
சாட்சியாக
இரு விழிகள் முழுதும்
கண்ணீர் துளிகள்!!!


வடியும் துளிகளை துடைத்து!
இறுக்க கட்டியணைத்து !
உந்தன் காதருகே வந்து
"I love U kuttyma" சொல்லி
உன் நெற்றி மேல் இதழ் பதிப்பேன்!


"Love U Too Mama" என நீ சொல்லி
என்னை மீண்டும் ஒருமுறை
அள்ளியணைத்துக் கொண்டு
நீ சிரிக்கும் அழகினை காண
ஆண்டு பல கடந்தாலும்
நான் காத்துக்கொண்டிப்பேனடி!!!


(தொலைதூரக்காதலில் கொஞ்சம்
தொலைவதும் சுகம் தான்!!!!)


கவிதைகளின் காதலன்
❤சேக் உதுமான்❤

எழுதியவர் : சேக் உதுமான் (8-Sep-20, 12:42 pm)
சேர்த்தது : சேக் உதுமான்
Tanglish : nam uyir kaadhal
பார்வை : 381

மேலே