அழகி அவள்
கருப்பழகி!
கலையான முக அழகி!
கன்னத்துக்குழியழகி!
•
•
கார்மேகக் குழலழகி!
காந்தக் கண்ணழகி!
•
•
கச்சிதமான கழுத்தழகி!
கனமான தனமழகி!
•
•
தாராள இடையழகி!
தங்கக் குணமழகி!
•
•
முந்திரி மூக்கழகி!
பவளமுத்துப் பல்லழகி!
மதிமயக்கும் இமையழகி!
•
•
செந்தேன் இதழழகி!
செந்தாமரை செவியழகி!
•
•
சலிப்பில்லா சிரிப்பழகி!
சங்கத்தமிழ் பேச்சழகி!
•
•
வானவில் புருவமழகி!
வாழைத்தண்டு காலழகி!
•
•
வெள்ளரிபிஞ்சு விரலழகி!
வெள்ளியோடை நடையழகி!
•
•
செம்மர முதுகழகி!
செழிப்பான பின்னழகி!
செதுக்கி வைத்த உடலழகி!
•
•
பட்டமில்லா உலகழகி!
பிரபஞ்சத்தின் பேரழகி!
•
•
நிதம் நிதம்
என் நினைவினில்
நிறைந்திருக்கும்
நீ என் அழகி!!!
•
•
எந்தன் இதயத்தின் பெண்ணழகி!
எனக்கான கவியழகி😍
•
•
கவிதைகளின் காதலன்
❤சேக் உதுமான்❤