The Ex Returns

என் வானில்
திடீரென்று ஒரு மாற்றம்!


தூரத்தில்
ஒரு பெண்ணின் தோற்றம்!


யார் என்று எட்டி பார்த்தேன்!!!


அன்று என் வானம் விட்டு
மறைந்து சென்ற வானவில் ஒன்று
இன்று என் வாசல் தேடி வந்து நின்று
என் பெயர் சொல்லி அழைத்தது...


ஆம்,
அவள் மீண்டும் வந்து விட்டாள்!!!


உந்தன் வருகை என்பது
நான் சற்றும் எதிர்பாராதது!


என் கண்கள் உன்னை கண்டதும்
இன்பம் என் இதயம் வழியே உட்புகுந்து
நான் இதமாய் பறக்கின்றேன்
வான் தாண்டி விண்வெளி எங்கும்!!!


என்னைத்தேடி வந்ததற்காக நன்றி...!


என் இளவரசியாய் இருந்தவள்
இப்போது யாரோ ஒருவனின்
இல்லத்தரசியாக ஆக போகிறேன்
என்ற செய்தியை சொல்ல
வந்துருக்கிறாய்!!!!


வாழ்த்துகள் பல
நீ எங்கு இருந்தாலும்
நலமாக வாழ என் நெஞ்சம்
என்றும் இறைவனை வேண்டும்...!


உன்னோடு வாழ்ந்த
அழகான காலங்கள் அனைத்தும்
என் வாழ்வின் அழியா பொக்கிஷங்கள்!


பேதை நீ
செவ்விதழ் திறந்து பேசினாய்
பல நாள் பழுதாகி கிடந்த
என் உயிரின் வேர்கள் யாவும்
புத்துணர்ச்சி பெற்று இயங்கியது...!


நம் இருவரின் இறந்தகாலத்தில் நடந்த
சில கசப்பான நிகழ்வுகளை மறந்துவிட்டு
இப்போது நகர்ந்து கொண்டிருக்கும்
நிகழ்காலத்திலும்,
இனி வரும் வருங்காலத்திலும்
நல்ல நண்பர்களாய்
இருப்போமா என்றாய்?


உன் சொல்லிற்கு மறுசொல் ஏதடி...


நீ விட்டு சென்ற இடத்திலிருந்து
தனித்தே பயணித்த என் பயணத்தில்
இன்று முதல் மீண்டும்
நான் உன் கரம் கோர்த்து
உன்னோடு சேர்ந்து
பயணிக்க போகிறேன்
நட்பெனும் பாதையில்
என் ஆயுள் காலம் உள்ள வரை!!!!


அன்று என் காதலி!
இன்று என் தோழி!


உறவுகளின் பெயர் முறைகளை
நம் தேவைகளுக்கு ஏற்றவாறு
மாற்றிக்கொள்ளலாம்
ஆனால் அவ்வுறவால் தோன்றிய
அன்பை மட்டும் மாற்றவும் முடியாது
மறக்கவும் முடியாது...!


அன்றும்!இன்றும்!என்றும்
உனக்கும் எனக்கும் இடையில்
இருக்கும் அன்பு என்பது
ஆழ்கடலை விட மிக ஆழமானது!!!


உன் உயிரில் நிறைந்திருக்கும்
உன் அன்பு நண்பனாக


கவிதைகளின் காதலன்
❤சேக் உதுமான்❤

எழுதியவர் : சேக் உதுமான் (8-Sep-20, 12:47 pm)
சேர்த்தது : சேக் உதுமான்
பார்வை : 404

மேலே