Insta காதல்

இணையம் மூலம் இணைந்த உறவே!
காலை விடிந்தும் கலையாத கனவே!


வலைதளம் மூலம்
என்னுள் அடித்தளம் அமைத்தவளே!
இன்ஸ்டாகிராமில்
என் இதயம் பறித்தவளே!


தேடி வந்து தேனாய் பேசும்
என் செல்ல தேவதையே!
.
இருளாய் இருந்த என் வானில்
புதிதாய் பூத்த நிலவு "நீ"..
.
முப்பொழுதும் என்னை
முழுவதுமாய் ஆழும் அழகியே!
.
வறட்சி வழிந்த என் வாழ்வில்
வசந்தமாய் வீசிய பூங்காற்று "நீ"..


என்னோடு நீ மனம் திறந்து
பேசும் போதெல்லாம்
என் நெஞ்சோடு வான் மழை தூவுகிறது..


தொடுதிரை தாண்டி
உன் மனத்திரைக் கண்டதால் தான்
என்னவோ என் உயிர்
உன் பின் உருகி நிற்கிறது..


என்ன மாயம் செய்தாயடி?
இந்த ஆணின் மனம்
அடிக்கடி எட்டிப்பார்த்துக்
கொண்டேயிருக்கிறது
Online ல் நீ இருக்கின்றாயா என்று...
.
நீ அனுப்பும் குறுஞ்செய்தியின்
'டொய்ங்' என்ற சப்தம் கேட்டாலே
என் உள்ளம் குஷியாகி
துள்ளி குதிக்கிறது...
.
நீ அன்பாய் பேச பேச
என் மனம் மண்டியிட்டு ஏங்குகிறது..
.
உன் பதில் வர சிறு தாமதம் ஆனால்
என் மனம் தவியாய் தவிக்கிறது..
.
சிறிது நேரத்திற்கு பிறகு
Late Reply க்கு Sorry Da என
"நீ" சொல்லும் போது
சிறகில்லா தேவதைகளும்
இந்த மண்ணில் உள்ளது என
என் உள்ளம் உன்னை எண்ணி
பெருமை கொள்கிறது..
.
"நீ" என்னோடு பேசுகையில்
ஒருமணி நேரம் கூட
ஒரு நிமிடமாய்
தீர்ந்து போகிறது!
தனிமை கூட துணை தேடுகிறது!
சோகம் கூட சோர்வாகிறது!


பெண்ணே!
.
உன்மேல் ஆசை கொண்டு
என்னை நானே மறந்தேன்..
.
என்னை உன்னுள் தேடி
அலையாய் அலைந்தேன்..
.
உள்ளத்தில் கலந்த "நீ"
உறவில் கலக்கப் போவது எப்போது?


அன்பே!
.
"😍"கண்கள் முழுதும் காதல் உள்ளது
என காட்டுகிறாய்...
"😘"கேட்காமலே முத்தம் தருகிறாய்...
"❤"அவ்வப்போது இதயம்
பறிமாறுகிறாய்...
.
கேட்டால் காதல் இல்லை
"Emoji"என்கிறாய்!
.
என்னடி நியாயம் இது?
.
படாதபாடு படுத்துகிறாய்
என் பிஞ்சு நெஞ்சம் பாவமடி!!!


கண்ணே!
.
கட்டிவைத்திருக்கும்
உன் காதலதை
கட்டவிழ்த்து விடு!
.
காத்திருக்கிறேன் உன் பதிலுக்காக
கனவுகளை சுமந்த இரவோடு!!
காதலை சுமந்த இதயத்தோடு!!


கவிதைகளின் காதலன்
❤சேக் உதுமான்❤

எழுதியவர் : சேக் உதுமான் (8-Sep-20, 12:49 pm)
சேர்த்தது : சேக் உதுமான்
பார்வை : 471

மேலே