இதழ்கள் கதைக்கும் நேரம்

உன் இதழ்கள்
என் இதழ்களை
கட்டியணைத்துக்
கதைத்துக் கொண்டிருக்கும்
காதல் காட்சியை பார்த்து
என் மனம் ரசித்துக் கொண்டிருந்தது...

இணைந்திருந்த நம் இதழ்களை
இடையூறு செய்ய வந்த
உன் ஒற்றை கூந்தலை
என் விரல்கள் இடைமறித்து
கைது செய்து
உன் காதுமடலில் கட்டி
சிறை பிடித்தது...!

கூந்தலுக்கு உதவி செய்த
குற்றத்திற்காக
கூந்தலின் கூட்டாளியான
காற்றினை கைது செய்ய
என் விரல்கள்
தனிப்படை அமைத்து
வலைவீசி தேடி வருகிறது!!!!

❤சேக் உதுமான் ❤

எழுதியவர் : சேக் உதுமான் (8-Sep-20, 1:23 pm)
சேர்த்தது : சேக் உதுமான்
பார்வை : 1661

மேலே