நகைச்சுவை- சிந்திக்க, சிரிக்க

ரமேஷ், சுரேஷ் இரு நண்பர்கள் உரையாடல்
------------------------------------------------------------------------

ரமேஷ் : என்னப்பா, சுரேஷ் உன்னை ரொம்ப நாளா ஒன்னு
கேக்கணும்னு நெனெச்சேன் இன்னிக்குதான் அதற்கு
வேலை வந்தது போலும்..... ஆமாம் நீயும் வேலையிலிருந்து
ஓய்வு பெற போற அடுத்த மாசம்.... பொண்ணுக்கு திருமணம்
செஞ்சு ஓய்ந்த.... பையனுக்கும் நல்ல கல்வி தந்த இப்போ
இவங்களுக்கு நீ சொத்தா என்ன வெச்சுட்டு போற... கொஞ்சம்
சொல்லேன்
சுரேஷ் : ரமேஷ் நீ என் ஆத்ம நண்பன் உன்கிட்ட சொல்லலாமா
வேற யார்கிட்ட சொல்லப்போறேன்.....நீ சொன்ன மாதிரி
என் கடமையை இறைவன் அருளால் ஓரளவுக்கு முடிச்சுட்டேன்
கல்வியோடு நமது கலாச்சாரம், நெறிமுறைகள்
பண்பாடு இவற்றை பசங்களுக்கு சிறுவயது முதல்
உனக்குத்தான் தெரியுமே, குருவை வைத்து சொல்லி
கொடுத்திருக்கேன்; இறைவன் நாமாவளி, வழிபாடு
அதன் அர்த்தம் இவைகள் எல்லாம் அவ்வப்போது
கதைகள் மூலம் சொல்லி இருக்கேன்.... எங்கப்பா
எனக்கு விட்டுச்சென்ற அழியா பொக்கிஷங்கள் அவர்
படித்து மகிழ்ந்த, ராமாயணம், மஹாபாரதம்
பகவத் கீதை , திருக்குறள் ஆகிய புத்தகங்கள்
நான் அவர்களுக்காக விட்டு செல்லும் சொத்துக்கள்..

ரமேஷ் : உச்சி குளிர்ந்தேன்.... கேட்கவே மயிர்க்கூச்சல்
எடுக்கின்றதுபா சுரேஷ்........
உன்னைப்போல் ஒரு தந்தை அமைய குடுத்து
வைக்கணும்...... மிக்க மகிழ்ச்சி நண்பா
உன் பதிலுக்கு

சுரேஷ் : எல்லாம் அவன் செயல் நண்பா

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (9-Sep-20, 10:19 am)
பார்வை : 676

மேலே