மஹாகவிக்கு ஓர் அஞ்சலி

பாரதி கவிதை எழுதாத
ஒரு தலைப்பும் உண்டோ
இயற்கையைப் பற்றி எழுதினான்
குயில் பாட்டு பாடினான்
தெய்வங்கள் மேல் தோத்திரங்கள்
இன்னும் சுதந்திரம் அடையாத
இந்தியரை தன் பாக்களால்
ஒவ்வோர் கணமும் ஊக்கிவிதான்
தமிழகத்தில் தியாகிகள் பெருகினர்
பெண்ணின் உரிமைக்கு போராடினான்
பாஞ்சாலி சபதம் படைத்தான்
தியாகிகளுக்கு தணிக்க கவிதை
படைத்தான் இலக்கண கவிதைகள்
இன்னும் புரட்சி செய்திட
அமெரிக்க கவிஞன் வால்ட்விட்மன்போல்
வாசன் கவிதையும் எழுதினான்

இப்படி எழுதிவந்த பாரதி
ஒற்றுமையின்றி சிதைந்து அந்நியரை
ஏற்றுக்கொண்டு தன்மானம் இழந்த
இந்நாட்டினர்க்கு சுதந்திர
வெறி ஏற்றினான் அவர் நாளங்களில்
ஓடும் ரத்த கீதமாய் .....
'வந்தே மாதரம் என்போம்...
என்று முழங்கினான்
சிந்துவையும் காவிரியையும் தன்
கவிதை வரிகளால் இணைத்தான்
தமிழே தன் உயிர் என்றவன்
'சுந்தர தெலுங்கினில் பாட்டிசைப்போம் என்றான்
'சேரநன்னாட்டு இளம் மங்கை என்றான்
அழகில் பூரித்து ஒருமை வளர்த்து

இப்படியும் பாடினான் பாரதி
' விண்ணை அளப்போம், விண்மீன்களை
........ சந்திரமண்டலத்தின் தன்மையை'

இன்று இந்தியா சந்திர மண்டலத்திற்கு
மனிதனை அனுப்பும் அளவிற்கு
முன்னேறி பாரதி கண்டா கனவை
நெனவாக்க முன்னேற.......
பாரதி கவிஞன் தீர்கதரிசி யானான்

இத்தனை ஏன் , சுதந்திரம்
அவன் உயிர் மூச்சு......
'ஆடுவோமே... பள்ளுபாடுவோமே
அனந்த சுதந்திரம் அடைத்துவிட்டோமே'
என்று பாடினான் தீர்கதரிசி ...

புலவர்கள் பொய்யை மெய்யாக்குவதும்
மெய்யைப் ஒய்யாக்குவதும் செய்வதில்
நிபுணர்கள் என்றால் நம் பாரதி
அதற்கு விதி விலக்கு.....
அவன் படைத்த கவிதைகளில்
ஒரு வரி... ஏன் சொல் கூட
பொய்யில்லை ...

பாரதி மஹாகவி
இந்திய தாயே இன்னும் ஓர்
பாரதியை எமக்கு நீ
ஈன்றெடுத்து கொடுப்பது எப்போ

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (12-Sep-20, 8:26 pm)
பார்வை : 184

மேலே