நான் வாழ்வதற்கு நீ வேண்டும் 555

என்னுயிரே...


நான் கண்விழிக்கும் நாட்களை
நகர்த்தி கொண்டு இருக்கிறேன்...


உன்
நினைவுகளை கொண்டு...

காலங்கள் உன்னை மறக்க
வைக்கும் என்று நினைத்தேன்...

நிச்சயம் இல்லை...

எதையும் ஏற்றுக்கொள்ளும்
பக்குவம் மட்டுமே கிடைத்திருகிறது...

நாட்களை கடத்த முடிந்த
என்னால் வாழமுடியவில்லை...

நான் வாழ்வதற்கு
நீ வேண்டும்...

பல வண்ணம் கொண்ட வானவில்
இல்லையடி என் உள்ளம்...

உயர்ந்திருக்கும் நீலவானம்...

நட்சத்திரம் போல் மின்னும்
உன் நினைவால் வாடுகிறேன்...

பௌர்ணமி நிலவாய்
வந்துவிடடி என் வாழ்வில்...

பிரகாசிக்க உனக்காக
காத்திருக்கும் நீல வானம் நான்.....


எழுதியவர் : முதல் பூ பெ.மணி (13-Sep-20, 6:35 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 862

மேலே