அனுமானம் வேண்டாம்

ஒரு வருடத்திற்கும் மேலாக வீட்டிற்கு பணியாள் இல்லாமல் வேலை செய்தது .... ஆரம்பத்தில் ஒரு உற்சாகத்தில் அனைத்து வேலைகளையும் தொய்வில்லாமல் செய்தாலும்.... நாட்கள் செல்லச் செல்ல ஏதோ ஒரு சலிப்பு தட்டிவிட்டது..... எந்த நேரமும் வேலை செய்துகொண்டே இருக்க வேண்டிய கட்டாயம்..... அதுவும் கொரோனா ஆட்டம் தொடங்கியப் பின்பு... பணிக்கு ஆள் வைக்க முடியாத சூழல்.... இன்னும் தூய்மையில் அதிக கவனம் செலுத்த வேண்டிய நிர்பந்தம்.....
நாளாக நாளாக உடல் சோர்வு, உள்ளச் சோர்வு எல்லாம் சேர்ந்து ஏதோ ஒரு அச்சத்துடன் மன அழுத்தம் ....
என் புலம்பலை கேட்க இருக்கும் ஒரே ஆள் மகள் மட்டுமே..... தினமும் அவளை அழைத்து பேசுவேன்... பாதி நேரம் புலம்பல்... சில நேரம் அழுகையும்....
அவள் சொன்ன ஒரே அறிவுரை... எப்படியும் நீதான் செய்யவேண்டும்... பேசாமல் Dish washer வாங்கிவிடு ...உனக்கு பாதி வேலைப் பளு குறையும் என்றாள்.... எனக்கு ஏகப்பட்ட சந்தேகம்.... அதெல்லாம் வெளிநாட்டவர் சமையலுக்குத்தான் சரிப்பட்டுவரும்... நம் வறுத்தல் வதக்கல் சமையல் பாத்திரங்களை எல்லாம் அது சரிவர தூய்மை படுத்தாது.... நாம் பார்த்துப் பார்த்து கையில் தேய்ப்பது போல் இருக்காது... அதுவும் பால் காய்க்கும் பாத்திரத்தை எல்லாம் நிச்சயம் சுத்தம் செய்யாது... இப்படி பல அனுமானங்களால் வாங்குவதை தவிர்த்தேன்.... அதையும் வாங்கி வீட்டை அடைக்கவா...?
பணம் கொடுத்து நானே ஏன் சூனியம் வைத்துக் கொள்ள வேண்டும் என்று எண்ணினேன்.... இதனால் இந்த Dish washer வாங்கும் எண்ணத்திற்கே நான் செல்லவில்லை ....

ஆனால் சென்ற வாரம் உடல் நிலை சரியில்லை... பாத்திரங்கள் மலைபோல் குவிந்து கிடந்தது.... இரவு பத்து மணிக்குமேல் விளக்கினேன்.... இலேசான காய்ச்சல் தும்மல் .... தொண்டைவலி.... எல்லாமே கொரோனா அறிகுறி போலவே இருந்தது... இதுபோன்ற நிலை எனக்கு அடிக்கடி ஏற்படுவதுதான்... ஆனால் கொரோனா காலம் என்பதால் தவிர்க்க முடியா அச்சம் தொற்றுநோயாய் தொற்றிக் கொண்டது.... துணைவர் கொடுத்த மருந்தால்...பூரண நலம்.....
என் நலன் கருதி எல்லோரும் வீட்டில் ஏகமனதாக Dish washer வாங்க முடிவு செய்து..... வாங்கியும் ஆகிவிட்டது.... உடனே இன்ஸ்டாலும் செய்தாகிவிட்டது..... ஆனால் ஒருவாரம் நான் பயன்படுத்தவே இல்லை.... ஏனோ அதன் செயல்பாட்டின் மீது எனக்கு துளிகூட நம்பிக்கை வரவேயில்லை..... இன்றுதான் வேண்டா வெறுப்பாய்... வாங்கி விட்டோம்.... வேறுவழியில்லை பயன்படுத்துவோம் என்று செயலில் இறங்கினேன்....
அத்தனை பாத்திரங்களும் பளிச் பளிச்.... அதுவும் ஸ்டீம் வாஷ்.... என்னே ஒரு புத்துணர்ச்சி எனக்கு.... ஏதோ பெரிய பாரம் குறைந்தது போல் உள்ளது......
எதையும் முழுதாய் தெரிய முயற்சிக்காமல்....பயன்படுத்தாமல் .....நாமே ஒரு அனுமானத்தில் முடிவெடுப்பது எவ்வளவு தவறு.... மகள் சொன்ன நேரத்திற்கே வாங்கி இருந்தால்.... என் பாதி வேலை பளு குறைந்திருக்கும்.... நேரமும் வீணாகி இருக்காது..... உடல் உபாதைகள் ஏற்பட்டிருக்காது.... மனச் சோர்வும் ஏற்பட்டிருக்காது......
என்னைப்போல் ஐயப்பாட்டில் உள்ளவர்கள் தயவுசெய்து அச்சம் வேண்டாம்.... அவசியம் வாங்குங்கள் .....

கண்டுபிடித்த புண்ணியவானுக்கு கோடான கோடி நன்றிகள்!

எழுதியவர் : வை.அமுதா (14-Sep-20, 6:23 am)
பார்வை : 81

மேலே