மனிதனை நம்பா உயிர்கள்

தினமும் உன் மூஞ்சில தானே முழிக்றேன்...,?

காலையில் நீ தேடி வரும்போதெல்லா
உன்ன வெரட்டிருக்கேனா...?உனக்கு சாப்ட எதாவது குடுக்காம விட்ருக்கேனா....?

அப்றம் எதுக்கு இவ்ளோ பதட்டப்பட்டு கத்ற...?

அதுவும் உன் கூட்டாளிகளை வேற கூப்டுட்டு வந்து ... நான் வெளில தலகாட்ட முடியாதபடி இப்டி தர்ணா பண்ற...?
இது கொஞ்சமாவது நியாயமா...?

நான் என்ன உனக்கு முன்னபின்ன தெரியாத ஆளா...?

நான் இவ்வளவு பேசியும் ... எந்த பதிலும் தராமல்... தலையை சாய்த்து என்னையே
உற்று உற்று பார்த்துக் கொண்டிருந்தாள் என் காக்கைத் தோழி....

மகனுக்கு சர்ஜரி வார்டில் நைட் டூட்டி... இன்னும் வீட்டிற்கு வராத நிலையில்... இவ்வளவு காலையில் யாருடன் பேசிக் கொண்டிருக்கிறேன் என்று யோசித்த வண்ணம் சமையலறைக்குள் நுழைந்த துணைவர்.... நான் என் காக்கைத் தோழியிடம் பேசிக் கொண்டிருப்பதை பார்த்து நகைத்தார்.....

”நான் தோட்டத்துக்கு தண்ணி ஊத்தப் போனா என்னக் கொத்த வருது.... என்ன சுத்தி சுத்தி வட்டம் அடிக்குது உன் செல்ல காக்கா......நீ என்னடானா அதுக்கிட்ட கொஞ்சிக்கிட்டு இருக்க...? ”நையாண்டி செய்தார் துணைவர்....

”உலர்ந்த துணிய எடுக்கப் போனே... என்னைய பார்த்தும்தான் அலறுது.... தலைல கொத்திரப் போவுதுனு உள்ள வந்துட்டேன்... இப்ப வாசல்ல வந்து கம்முனு நிக்குது.... அதான், அதுகிட்ட பேச்சு வார்த்தை நடத்திக்கிட்டு இருக்கேன்....
ரெண்டு பேருக்கு இடைல ஒரு உடன்படிக்கை வந்தது சொல்றேன்... அப்றம் போய் செடிக்கு தண்ணி ஊத்துங்க...” சன்னமாய் சொன்னேன்.....

“ஆஹா...ஆஹா...
நா என்னதான் வெரன்டுதுன்னு நெனச்சே.... சோறு வைக்ற ஒன்னையும் வெரட்டுதா...?
பார்த்தியா அது ஒன்னையும நம்பல....”பரிகசித்தார் துணைவர்....

உண்மைதான் ! இப்போது மனிதர்களை எந்த உயிர்களுமே நம்புவதில்லை.... பெரிய சுயநலவாதிகள் மனிதர்கள் ... எதை செய்தாலும் ஏதோ ஒரு காரண காரியத்துடன்தான் செய்வான் மனிதன் என்பதை அனைத்து உயிர்களும் நம்புகின்றன.... தன் குஞ்சுகளுக்கு ஆபத்து வந்துவிடுமோ என்ற அச்சத்தில்... தாய் காகம் எவரும் அந்த திசையை நோக்கி திரும்பிப் பார்த்தாலே எச்சரிக்கையாக அலறுகிறது....
அதன் தாய்மை உணர்வை பாராட்டவா...?
எவ்வளவு அதற்கு உதவினாலும் , மனிதர்களை அது துளிகூட நம்பாத நிலையை கண்டு வெட்கப்படவா...?

அன்பால் ஒரு பறவையின் நம்பிக்கையை கூட சம்பாதிக்க நம்மால் இயலவில்லையே என்று நினைக்கும்போது உண்மையில் வேதனையாக உள்ளது..!

எழுதியவர் : வை.அமுதா (14-Sep-20, 6:17 am)
பார்வை : 79

சிறந்த கட்டுரைகள்

மேலே