அறிஞர்
அறிஞர்
நேரிசை ஆசிரியப்பா
பழமொழி எனினும் ஜெர்மனிப் பழமொழி
அறிவுரை எனினும் வேற்றுமொழி யில்சொல்வான்
ஆங்கில இலத்தின் ரஷ்யா அமெரிக்கா
எப்பழ மொழியறி வுறையும் சொல்வான்
முஸ்லீம் எங்களின் குரானில் பாரென்பான்
பின்கிருத்து வன்பைபிளைக் காட்டிச் சொல்கிறான்
தமிழன் என்றும் பிறமொழியில் காட்டுவன்
அறிஞர் பெயருடன் உளருவன் கிராதகன்
காட்டாய் சொல்லான் நம்குறளைக் காட்டி
காட்டியவன் அறியானே அப்பிற மொழியும்
அவன்சொன் னானிவன் யெவனையும் காட்டும்நீ
காட்டாய் ஒளவைபல நூலுடன் வள்ளுவனை
உண்மையில் மூடன் என்பேன் உன்னை
ஜெர்மன் உனக்கேன் ஜெர்மனி பழமொழிப்பின்
ஆங்கிலம் அறிந்திடா உனக்கேனப் பழமொழி
வெட்கக் கேடுவிந் தைமனிதர்
மூடரறி யாராம்நம் தமிழ்ப்பழ மொழிகளையே

