குறுந்தகவல்
என் அலைபேசியில்
குறுந்தகவல் வரும் சத்தம் கேட்டாலே
நீயாக இருக்கவேண்டும் என்றே
ஓடி சென்று பார்க்கின்றேன் - ஆனால்
ஒவ்வொரு முறையும் ஏமாற்றமே...
என்னை காயப்படுத்தவாவது
ஒருமுறை தகவல் அனுப்பிவிட்டு
என் அலைபேசிக்கும் எனக்கும் அதுவே போதும்
நினைவுகளே சுகம்..