ரோஜா மலரே
பூத்து குலுங்கும் மலர்களில்
வகைகள் பல உண்டு
வித விதமான வண்ணங்களில்
வித விதமான வடிவங்களில்
வித விதமான நறுமணங்களில்
வித விதமான மருத்தவ குணங்களில்,,!!
எல்லா மலருக்கும் ஒரு சிறப்பு உண்டு
அதில் ரோஜா மலருக்கு தனி சிறப்பு உண்டு
எல்லா வயதினரும் எல்லா நேரங்களிலும்
விரும்பும் மலர் ரோஜா மலர்
காதலர்களின் இதய மலர் என்ற
பெருமையும் ரோஜா மலருக்கு உண்டு
ரோஜா மலரின் அருமை பெருமைகளை
இப்படி வகை வகையாக வரிசைப்படுத்தி
பாமாலை தொடுக்கலாம்....!!!
அதனால்தான் மலர்களின் ராஜா
ரோஜா மலருக்கு எல்லோர் மனதிலும்
தனி சிம்மாசனம் எப்போதும் உண்டு..!!
--கோவை சுபா