விவசாயின் கண்ணீர்
சிரித்தாலும் கண்ணீர் வரும்
அழுதாலும் கண்ணீர் வரும்
அதுபோல்...!!
மழை பெய்யவில்லை என்றாலும்
விவசாயின் கண்களில் கண்ணீர்
மழை எல்லை மீறி பெய்தாலும்
விவசாயின் கண்களில் கண்ணீர்,,!!
மொத்தத்தில் விலைபோகா
பொருள்களைப்போல்
கண்ணீரில் மிதக்கும்
விவசாயின் வாழ்க்கை..!!
--கோவை சுபா