செருப்புக் கூட செருக்காய்
மரங்கள் பல வகையாம்
மகத்துவங்கள் கொண்டவையாம்
அரிய பல மரங்கள்
ஆகாயம் தொட ஆசைக்கொள்ளும்
சிறிய விதைக்குள் கருவிருக்கும்
சீரிய இளமையாய் மரமிருக்கும்
சின்னப் பூக்களால் கவர்ந்திழுக்கும்
சில்லென்று அதன்கீழ் நிழல் கொடுக்கும்
பல ஆண்டுகளாய் வாழ்ந்தாலும்
பாராள ஆசைக் கொண்டதில்லை
செருப்புக் கூட செருக்காய் அரியணையில்
செம்மரங்களும் மருந்தாய் அடுக்களையில்
பிள்ளைப் பேறு முதல் பிணமாகும் வரை
பெரிதும் தமக்குதவுவது மரங்களே
ஆத்திரத்திலோ அலங்காரத்திற்கோ வெட்டிணும்
அணுவளவேணும் அலட்டிக் கொள்ளாதவை
அரிய பெரிய மரங்களை
அரவணைத்து நாம் காத்திடுங்கால்
பெருகி வரும் பேராபத்தை
பிடி அளவேனும் போக்கிடலாம் இல்லையேல் பாழ்.
------ நன்னாடன்.