காதல் ஓலை

கந்தல் காழகம் உடுத்தி
ஓட்டை குரம்பை வசித்து
கஞ்சி அயில் நிலை கொண்டு
பண்பில் கவ்வை இன்றி வாழும்
கன்னி உந்தன் கரம் பிடிக்க ஆசைதான்

காதலுடன் உன் தோள்சாய்ந்து
அத்தம் முழுதும் உறவியை போல் ஊர்ந்திட ஆசைதான்

கங்குல் முழுதும் என் கண் இமையில்
பிம்பமாய் இருக்கும் நீ காதலுடன் என் கரம் பிடிப்பாயா என்ற ஓர்வு என் இதயத்தை சகடம் வேகத்தில் அல்கல் முழுதும் துடிக்க வைக்கிறது

என் காதலை சிற்றில் போல்
எண்ணி வசிப்பாயா அல்ல
அசும்பு போல் எண்ணி விலகி செல்வாயா என்று எண்ணி புரியா புதிராக நான் காத்து இருக்கேன்.

எழுதியவர் : த. தமிழ்வாணன் (22-Sep-20, 12:13 pm)
Tanglish : kaadhal olai
பார்வை : 176

மேலே