திரும்பி திரும்பி பார்க்கிறேன்
வலித்தது...
நான் உன்னை பிரிந்து
கடநதபோது..
நீ மௌனத்தால் கொடுத்த பிரியாவிடை
நீ வார்த்தைகளை தொலைத்து
போகாதே என்று தடுக்க வழியின்றி
கனத்த இதயத்தோடு
வழியனுப்பி வைத்தாய் என்னை...
போகாதே என்னை விட்டுவிட்டு போகாதே
என்று என்னை ஆரத்தழுவி கொள்வாய் என்று
ஒரு குழந்தையை போல திரும்பி திரும்பி .....
பார்த்துக்கொண்டு
முன்னே நகர்கிறது என் கால்கள்
வலிக்கிறது...
இதயம் கனக்கிறது...
வலியுடன் நான்
பிரியன்...