கலைச்சொற்களில் காதல் கவிதை

குரம்பையில் பிறந்து எழிலான கோள விழியால்
கொஞ்சல் மொழியால் நெஞ்சுக்குள் புகுந்து
காதல் சகடத்தை காற்றாய் செலுத்தும் அஞ்சுகமே
அல்கல் பெரும் ஆசைக்கொண்டு கங்குல் அயராமல்
காதல் ஓர்வால் களைப்படைந்து காண்பதை அயின்று
அசும்பில் சிக்கிய வேழம் போல ஆற்றல் இழந்து
அல்லாடிக் கொண்டுள்ளேன் அழகியே - நீ
அரவணைப்பாய் ஒரு காதல் வார்த்தை கூறினால்
அகிலத்தின் கவ்வைக்கு ஆட்பட வேண்டாம் அல்லியே
அதுதவிர்த்து அபத்தமாய் எவ்வார்த்தை நீ கூறினாலும்
அத்தம் சென்று பெரும் அனலில் சிக்கிய உறவியாய்
அணல் வளர்த்து காழகம் கிழித்து மனம் நோகுமடி
அழகு சிறார்கள் கட்டும் சிற்றில் என்று எண்ணாதே
ஆதி இறைவனுக்கு காதலால் பூசலார் கட்டிய மனக்கோயில் போன்றது என் மகத்துவ காதல்.
-------- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (22-Sep-20, 7:51 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 169

மேலே