நாமிருவர் நமக்கிருவர்

மலட்டுத்தன்மையே இல்லையே உலக விதைகளிலே
மாமியார் தொல்லை இருப்பதில்லை அவைகளிடையே
ஏமாற்று எண்ணம் இல்லையே எந்தத் தாவாரத்திற்கும்
ஏற்றத்தாழ்வாய் பார்ப்பதில்லை எந்த மண்ணையும்
உள்ளதில் உரியதை எடுத்து உலகிற்கு கொடுத்திடும்
ஒவ்வாத எதுவென்றாலும் உட்கொண்டு செரித்திடும்
அறிவு அது வளர்ந்ததால் தவறு பெரியதாய் நடக்குது
அரிதான பிள்ளைப் பேற்றை அறிவே கெடுக்குது
நாமிருவர் நமக்கிருவர் நாமம் இங்கே ஒழிந்தது
நாள்தோறும் பிள்ளை பெறுவோர் எண்ணிக்கையோ குறையுது
உலக வர்த்தகம் ஒருமித்த ஆண்டு முதல் சோதனை
ஒவ்வொரு துறையிலும் இந்தியாவை ஓங்கி சிதைக்குது
மூத்திர துளையின் முதல் முகம் பூசும் மாவு வரை
முழுதான கலப்படத்தால் முழு வாழ்வும் சிதையுது
எளிதாக கிடைக்கும் எதுவும் தலைமுறை அழித்திடும்
வெகுகாலம் விளையும் தேக்கு நெடுநாளாய் இருந்திடும்.
-------- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (24-Sep-20, 10:27 am)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 21

சிறந்த கவிதைகள்

மேலே