பந்த பாசம்

சொந்த பந்தகளோடு
இருப்பது வரம்தான்
வரம்புகள் மீறாதவரை
சந்தோசம் இருக்கும்...

ஆனால்..நாம் எவ்வளவு
அனுசரித்து வாழ்ந்தாலும்
பல உறவுகள் நம்மிடம்
உண்மையாய் இருப்பதில்லை

பந்தம் என்ற பாசவலையில்
சிக்கி கொண்டால்
சிலந்தி வலையில் சிக்கி
கொண்ட பூச்சியின் நிலைதான்

வள்ளுவன் சொல்வதுபோல்
ஆசைகள் அனைத்தையும் விடுத்து
பற்று இல்லாத இறைவன் மீது
ஆசை கொண்டு பற்றுக்களை விடு

"பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு"

--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (24-Sep-20, 12:08 pm)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : pantha paasam
பார்வை : 206

மேலே