கிராமம்

கிராமம்
இயற்கையான மனம்
விசிறி யடிக்கும் மரம்
தென்றல்
தேன் கூடு
கூவும் குயில்
கொக்கரிக்கும் சேவல்
தின்னையிலே நாய்
தென்னையில் நான்
பறித்த இழனியை
பருகும் மகன்
பக்கத்தில் பட்டாம் பூச்சியை
விரட்டிப் பிடிக்கும் மகள்
கட்டான் தரையில் கட்டம் போட்டு
கல்லை வைத்து கள்ளமில்லா விளையாட்டு
விறகடுப்பில் வேக வைத்து வேகமாக அவள்
இடுப்பில் அதை சுமந்து உச்சி வெயிலுக்குல்
இலைப்பாற சுடு கஞ்சியை பனை ஒலையில்
ஊற்றி தந்த என்னவள்.
எங்கள் நிலத்தில் நாங்கள் விலைய வைத்த
காய்கறிகள் , நெல் அரிசி, அதன் ருசி
உணவிற்கு பின் ஓலை குடிசையில் ஓரமான
இடத்தில் பாயை விரித்து படுத்துறங்கையில்
தாலாட்டாய் மயிலில் அகவல்
சோர்வு முடிந்து கண் விழிக்கையில்
தன்னை மறைத்து நிலவுக்கு ஒளி குடுக்கும் சூரியன்
பாத்தி கட்டி வேலி அடைத்து வீதியில் நண்பர்களுடன்
உரையாடி
கபடி விளையாடி கலைப்புடன் வந்த மகனிடம்
கதையாடி
நகைச்சுவை பேச்சுடன்
நாவின் சுவை கலந்தவுடன்
நிலா வெளிச்சத்தில் என் நிலாவுடன்
நட்சத்திரமான மின்னும் நொடிகளுடன்
உரங்க தொடங்கும் கனவு காணும் கண்கள்

எழுதியவர் : காவேரி நாதன் (24-Sep-20, 12:10 pm)
சேர்த்தது : KAVERINATHAN
Tanglish : giramam
பார்வை : 27

மேலே