காய் காய் கணக்காய் சிறப்பாய்

பாகற்காய் பறங்கிக்காய் பலமான பலாக்காய்
கோவக்காய் குடைமிளகாய் குண்டான சுண்டைக்காய்
சாதிக்காய் மாசிக்காய் மிடுக்கைத்தரும் கடுக்காய்
சுரைக்காய் பீர்கங்காய் குதுகலிக்கும் முருங்கைக்காய்
கத்தரிக்காய் களாக்காய் பித்தம் நீக்கும் வேப்பங்காய்
பனங்காய் தென்னங்காய் புளிப்பான மாங்காய்
புளியாங்காய் வெண்டைக்காய் துவர்ப்பு வாழைக்காய்
அத்திக்காய் ஆலங்காய் அழகான அரசங்காய்
நொச்சிக்காய் நுணக்காய் நோய் களைக்கும் நூக்கல்காய்
அவரைக்காய் நெல்லிக்காய் அனல் நீக்கும் வெள்ளரிக்காய்
பயத்தங்காய் புடலங்காய் கொத்தான கொத்தவரங்காய்
மரக்காய் செடிக்காய் மகத்துவமான கொடிக்காய்
கணக்காய் நமக்காய் உணவாய் உண்டோமென்றால்
திடமாய் தெளிவாய் சிறப்பாய் வாழ்வோம் அன்பாய்.
-------- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (25-Sep-20, 11:11 am)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 208

சிறந்த கவிதைகள்

மேலே