நீ நிரந்தரமானவன்

பாடும் நிலவே
இசை வானத்தை விட்டு
எங்கே சென்றாய்
நாங்கள் இருளில் மூழ்கிவிட்டோம்

தேவலோக பிள்ளைகளுக்கு
இசைக் கற்றுத்தர அந்த மகாதேவனே உம்மை
அழைத்துக்கொண்டானோ

எங்களின்
மனம் சோர்வடையும்
போதெல்லாம்
உங்களின் பாட்டு
ஆறுதல் மருந்து எங்களுக்கு

மன அழுத்தம்
பணிச்சுமை
சஞ்சலங்கள்
ஏதோ இனம்புரியாத
இன்னல் வரும்போதல்லாம்
உங்களின் பாட்டு தென்றலைப்போல்
மனதை வருடிவிட்டு செல்லும்

எத்தனை எத்தனை மொழிகளில்
எத்தனை ஆயிரம் பாட்டுக்கள்
அத்தனையும் முத்துச் சிதறல்கள்

வாழ்க்கையில்
ஒவ்வொரு தருணத்திலும்
உங்களின் பாட்டு
கூடவே வருகிறது கடைசிவரைக்கும்
தொட்டில் முதல் நடமாடும் கட்டில்வரை

உலக வரைப்படத்தில்
உங்களின் தெய்வீக குரலுக்கென்றே
ஒரு தனி அடையாளம் உண்டு
மூச்சு விடாமல் பாடிய
இசைச் சிகரமே
உனக்கா மூச்சுத் திணறல்

அடி என்றால்
அதற்க்கு ஒரு முடி உண்டு
முதல் என்றால் அதற்க்கொரு
முடிவு உண்டு
பிறப்பென்றால் அதற்க்கொரு
இறப்புண்டு
இது இயற்கையின் நியதி
என ஆறுதல் கொள்ளமுடியவில்லை
உங்களின் இறப்பில் எங்களால்

இறைவன் அளித்த
மகத்தான வரம் உமக்கு
நீங்கள் இறக்கவில்லை
காற்றிருக்கும்
இடங்களிலெல்லாம்
நீங்கள் வாழ்ந்துக்கொண்டே
இருக்கிறீர்கள்

காற்று அழியும் வரை
உங்களுக்கு அழிவே கிடையாது
நீ நிரந்தரமானவன்
மரணம் உன் உடலுக்கே தவிர
உன் புகழுக்கல்ல...

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (26-Sep-20, 4:32 am)
பார்வை : 159

மேலே