பாடும் நிலா பாலு
காலத்தை வென்ற கலைஞன்🌹
பாடும் நிலா பாலு.
தேவ குரலுக்குச் சொந்தக்காரன்
தேவலோகம் சென்று விட்டான்
காணக் குயில் குரலுக்குச்
சொந்தக்காரன் சொர்க்கலோகம் சென்று விட்டான்
தித்திக்கும் தேன் குரலுக்குச்
சொந்தக்காரன் தேவனிடம்
சென்று விட்டான்
முத்தான பாடல்களுக்குச்
சொந்தக்காரன்
முக்தி அடைந்து
வானுலகம்
சென்று விட்டான்
அமுதகானத்துக்குச்
சொந்தக்காரன்
ஆளா துயரத்தில்
ஆழ்த்திவிட்டு
விண்ணுலகம்
சென்றுவிட்டான்
மணி, மணியான
பாடல்களுக்குச் சொந்தக்காரன்
மாயலோகம் சென்று விட்டான்
இனிமையான குரலுக்குச்
சொந்தக்காரன்
இந்திரலோகம் சென்று விட்டான்
அக்கார வடிசலையும்,
திருகண்ணமுதவையும்
ஒரு சேர அமுதமென கலந்து தினம்
சுவைப்பட அளித்தவன்
வைகுண்டம்
சென்று விட்டான்
அண்ணாமலையார் புகழ் பாடி அசத்தியவன்
சிவலோக பதவியில் கையெழுத்திட சிவலோகம்
சென்று விட்டான்.
காற்றில் கலந்த உன் குரல் தென்றலாகத் தினம் தீண்டும்
புன்னகையாகத் தினம் மலரும்
நாணலாய் அசைந்தாடும்
வண்டாய்
ரீங்காரமிடும்
அருவியாய் ஆர்ப்பரிக்கும்
ஆனந்த குயிலின் குரலாய் ஒலிக்கும்
சிற்றோடை எனச் சிருங்காரம் பயிலும்
கடற்கரை அலைகளில் தவழும்
மூங்கில்களுக்குள் சென்று புல்லாங்குழலாய் இசைக்கும்
நிலவை மலரன அணைக்கும்
திரும்பும் திசையெங்கும்
எட்டுத் திக்கும்
பல நூறு ஆண்டுக்கு
உன் அதிசய குரல் ஒலிக்கும்
காலத்தை வென்ற மகா கலைஞனே
தலைமுறைகள் பல கண்ட மாபெரும் சாதனைக்கு சொந்தக்காரனே
நீ நிரந்தரமானவன்
நீ இறக்கவில்லை
நீ இறக்கை ஏய்துவிட்டாய்
நீ பஞ்ச பூதங்களில் கலந்துவிட்டாய்
நீ குரல்களின் பல்கலைக்கழகம்
நீ பாடல்களின் மதனோற்சவம்
நீ பாவேந்தர்களின் முகவரி
நீ இசை வேந்தர்களின் இதயக்கனி
நீ இல்லாத இந்திய இசை இனி முகாரி
நீ மிகப் பெரிய இசை சகாப்தம்.
நீ இசை சாம்ராஜியத்தன் பேரரசன்.
நீ நீண்ட நெடிய வரலாறு.
நின் புகழ் அழியாது அது ஆண்டவன் படைத்த பிரபஞ்சம்
முழுவதும் எங்கும் எதிலும் வியாபிக்கும்.
- பாலு.