முகநூல் பதிவு 126

வணக்கம் சொல்லி வரவேற்கும் பண்பாட்டை
வணங்கி வரவேற்போம்.....!

நம் தலைமுறையில் நம் பெற்றோர்கள் ஊட்டிய நல்ல பண்பாடுகளை அடுத்தத் தலைமுறைக்கு கற்றுத் தர தவறிவிட்டோம்....
வீட்டுக்கு வரும் உறவினர்களையும் நண்பர்களையும் வரவேற்கும் போது வீட்டில் உள்ள குழந்தைகளை வந்தவர்களை வணங்கி வரவேற்க கற்றுத் தந்தனர்....
கிறுத்துவக் குடும்பங்களில் வந்தவர்களை வரவேற்க " தோத்திரம் " என்று சொல்வதும் இசுலாமியர்கள் இல்லங்களில் "சலாம்" என்று சொல்வதும் புழக்கத்தில் இருந்தது....
இந்துக்களில் பிராமணர்கள் வீடுகளில் "நமஸ்காரம்" என்றும் திராவிட பாரம்பரியத்தில் உள்ள குடும்பங்களில் " வணக்கம் " என்று சொல்லக் கற்றுத் தந்தனர்....
ஆனால் அந்தப் பண்பாடு இன்று மறைந்து வருகிறது....
குழந்தைகளுக்கு" Hi" சொல்லவும் "bye" சொல்லவும் கற்றுத் தருகிறோம்.....
இவை எளிமையான முறை என்பதாலோ அவர்கள் உறவுகளையும் பெரிதாக எடுத்துக் கொள்ள தவறிவிடுகிறார்கள்.....
வளரும் சமுதாயத்திற்கு வணக்கம் சொல்லக் கற்றுத் தருவோம்......

( ஆனால் தகுதி அற்றவரை வணங்குவதையும் சுய லாபத்திற்காய் சுயமரியாதை இழந்து காலில் விழும் கலாச்சாரத்தையும் தவிர்ப்போம்)

கவிதாயினி அமுதா பொற்கொடி

எழுதியவர் : வை.அமுதா (29-Sep-20, 10:07 pm)
பார்வை : 51

மேலே