உப்பிய கன்னங்களில்
தினவெடுத்து அரிக்கும் காலின் பாதத்தில்
கொதித்த சுடுநீரை ஊற்றியதைப் போல்
இதமாய் உள்ளதடி உன்னின் அழகு புன்னகை
குவித்து வைத்த விதையில்லா பஞ்சியினுள்
குதித்து விளையாடும்போது குதுகலம் கிடைக்குமே
அதுபோல் என்னருகில் நீ வரும்போது ஆகுதடி மனம்
நிறைந்த மஞ்சள் நிற ஆடையை அணிந்து
கருத்த கண்மையைத் தீட்டி கூர்ந்து நீ பார்க்கையில்
குறு குறுப்பில் மனம் குமிழாய் கொப்பலிக்குதடி
உன் உப்பிய கன்னங்களில் ஓடும் பச்சை இரத்தம்
என் மெல்லிய இதயத்தில் மின்னலாய் தாக்க
துள்ளிக் குதித்தவாறு தும்பியாய் பறக்கிறேனடி
கையில் கணக்கின்றி பணம் கொடுத்து உண்ண சுவை மிகுந்த உணவை குவித்து
ஊட்ட உலக அழகியை வைத்தால் எப்படி மகிழ்வோ
அதனினும் ஆயிரமடங்கு அதிகமடி உன் காதல் ஒப்புதல் .
------- நன்னாடன்.
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
