சிகரத்தை நோக்கியே

வெண் கொற்ற குடையின் கீழ்
தண்ணிலவாய் தலைவன்
அவன் நிழலில் மக்கள் யாம்
கண்டோம் அமைதி
குறையேதும் இன்றி தமிழ் எனும்
தரம் மாறா தமிழ் மணம் கமழ
சீரான வாழ்கை செப்பனுடன்
வாழ்ந்தோம்
ஊர் சேர ஓன்று பட்டோம்
தாய் போன்ற தலைவனின் கீழ் ,
தலைவனாய், தாயாய், தமிழாய்
தன்னிகரற்ற தலைவன்
கோலோச்சி வாழ்ந்த முறை
எங்கெங்கும் கண்டதுமில்லை
தமிழன்
வரலாற்றில் கால் பதித்த காலமது
இன்னும் முடியாத வரலாறு தொடர்கின்றது
தமிழன் குணமோ, தரமோ
சிகரத்தை நோக்கியே .....

எழுதியவர் : பாத்திமாமலர் (30-Sep-20, 11:30 am)
சேர்த்தது : பாத்திமா மலர்
Tanglish : sikarathai nokkiye
பார்வை : 142

மேலே