கவிதைப் பாடாதே

கவிதை பாடாதே

கட்டளைக் கலித்துறை


கல்வியை முன்னவர் கற்றுகவி பவவன் றேசெய்தார்
சொல்தமிழ் நூலெலா மாய்கருத்தை புனைந்து செய்தாரே
பல்கலை காவியங் கள்புலவர் தமிழில் பாடிட்டார்
நல்கவி நானெழு தத்தடுத்தார் பிரதி யாமென்றே


தமிழை அகத்தியன் சமைத்த நாளிலிருந்தே புலவர்கள் கவிதைகளும் காப்பியங்களும்
காவியங்களும் எழுதினார்கள். அப்புலவெரெல்லாம் எல்லாக் கருத்தையும் எழுதித்தீர்த்து
விட்டார்கள் போலும். இப்போது நான் எதை எழுதினாலும் இது புறநானூற்றில் உள்ளது
இராமாயணத்தில் சிலப்பதிகாரத்தில் மற்றும் அதிலுள்ளது இதிலுள்ளது அதன் காப்பி
இதன் காப்பி என்று சொல்லுமளவுக்கு அத்தனையும் புலவர்கள் எழுதிவிட்டார்களே.
நான் ஒருசிறு கவிதை எழுதவும் வார்த்தை கிடைக்கவில்லையே என்ன செய்வேன்.



எழுதியவர் : பழனிராஜன் (1-Oct-20, 3:36 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 62

மேலே