மகாத்மாவாய் உயர்ந்தான்

பொக்கைவாய்ப் புன்னகைக்காரன்
பொய்மையை வீழ்த்தி வென்றான்
கையில் தடியேந்தியும் நெடுக நடந்தான்
அந்நியனை போ போ என்று விரட்டினான்
சாத்வீக சத்தியாகிரகமே போரென்றான்
சத்தியமே வாழ்வென்றான்
மோகனதாஸ் இன்று பிறந்தான்
மகாத்மாவாய் உயர்ந்தான்
உத்தமனை சுதந்திரம் வாங்கித் தந்தவனை
இன்று போற்றிடுவோம் நன்றியுடன் !