நன்றியின்மை நாகரீகம் அன்று

தென்றல் இனிது தேனினிது
ஒன்றுபட்டு வாழ்தல் தேனினுமினிது
கன்றினிது பசும்பால் இனிது
நன்றுசொலல் பாலினும் இனிது !

நன்றி உணர்வுசால வும்நன்று
நன்றியின்மை நாகரீகம் அன்று
வென்றிடு வாழ்வில் என்றும்
வென்றபின் அடக்கம் உயர்வு !

எழுதியவர் : கவின் சாரலன் (2-Oct-20, 10:04 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 60

மேலே