பெண்ணழகு

பெண்ணழகு

அன்னத்தில் பேடை யழகில்லை ஆணன்னம்
தன்னழகில் மான்மயிலும் ஆண்கழறும் - சின்ன
நிலவி னழகதும் ஆணாம் நிலத்தில்
குலவும் உவமைப்பெண் பொய்

அழகத் தனையும் உலகிலே ஆணாம்
அழகெதுவும் பெண்ணுவமை கொண்டார் -- விழலும்
மணியழகு காணாத் தனிப்புல்லாம் காதல்
பிணியூதித் தீயாக்கி னார்


Xx

எழுதியவர் : பழனிராஜன் (7-Oct-20, 1:38 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 340

மேலே