வெகுளி பெண்ணின் கருணையும், விவேகமும்

ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்த ஒரு சிறுமி. அவளுக்கு அவள் பெற்றோர் " தெய்வி " என்று பெயர் சூட்டினார்கள்.

அவளை வீட்டில் எல்லோரும் "சாமி" "செல்லம்" என்று கூப்பிடுவார்கள் . “ தெய்வி ” யின் அப்பா கஷ்டப்படுபவருக்கு பல உதவிகள் செய்வார். நமக்கு நாளைக்கு வேண்டுமென்று நினைக்கமாட்டார் உதவி என்று யாரு வந்தாலும் அவர்களுக்கு உதவி செய்வார்.

தெய்வி தன் அம்மாவோட இருந்ததைவிட தன் அப்பாவின் அருகில்தான் இருப்பாள் அவர் செய்யும் உதவி , அவர் பேசும் விதம், எல்லாமே சிறுவயதிலேயே தெய்வி மனதில் பதிந்தது. " தெய்வி " பெயரில் “ தெய்வீகமாக “ தோன்றியதால் தவறு என்று எதையெல்லாம் சொல்வோமோ அதையெல்லாம் செய்யக்கூடாது என்று அவளுக்கு தோன்றும்.

சிறு, சிறு, தவறுகள் செய்வாள் ஆனால் , அது தவறு என்று தெரிந்தால் அதை விட்டுவிடுவாள். பொய் பேச தெரியாது, அப்படியே சில விசயத்தை மறைத்து பேச தோன்றினாலும் அது தவறு என்று அவள் மனம் உறுத்தலாக இருக்கும். உண்மையை சொல்லி அதற்குரிய தண்டனையை அனுபவிப்பாள்.

தெய்வியும் தன் சிறுவயதிலிருந்து யாராவது மற்றவரிடம் உதவிக்கு நின்றாலும், தெய்வி அவர்கள் எதற்காக உதவி கேட்கிறார்கள் என்று தெரிந்து கொண்டு உதவி செய்வார்.

தெய்வி விளையாட்டு, நடனம், என்று பல திறமையுடையவள். படிப்பில் நடுத்தரம், மற்றவர் பாராட்டுவதை விரும்புவாள், மகிழ்ச்சி அடைவாள், அவளுக்கு பிடித்த விசயத்தைக் மற்றவர் இது தவறு என்று சொன்னால் தனக்கென இருக்கும் ஆசை, விருப்பம் அனைத்தையும் விட்டுவிடுவாள்.
நம்மால் மற்றவர் கஷ்டப்படக்கூடாது என்பதும் அவள் சிறுவயதில் பதிந்த ஒன்று.
தனக்கு சரியென்று தெரிந்த விசயத்தை செய்து மற்றவர் அதை தவறு என்று சொல்லி ஏசுவார்கள். இறக்க குணம் உடையவள்.

சில வருடத்திற்கு பிறகு திருமணம் நடந்தது. தெய்வி உடைய குணத்துக்கும், புகுந்த வீட்டில் இருப்பவரின் குணத்துக்கும் நெறைய வேறுபாடு இருந்தது. அதிலிருந்து கடந்து தனது முப்பத்திஆறாவது வயதை அடைந்தாள். தனக்கென்று இரண்டு குழந்தைகள். அவர்களுக்கும் பதிமூன்று, பதினாறு, வயதை அடைந்தார்கள்.

தெய்வி தனது முப்பத்திஆறாவது வயதில் திடீர்!!!! என்று ஒரு யோசனை வந்தது.
தனது சிறுவயதிலிருந்து இன்றுவரை நாம் அனுபவித்த துன்பம், இன்பம் என்ன? என்று யோசிக்க ஆரம்பித்தாள்.

அதில் தான் அதிகமா அனுபவித்தது துன்பம் மட்டும் தான்.
அனாலும் , முப்பத்தியாறு வயதுவரை கடந்து வந்ததற்கு கரணம் அவளுடைய நல்ல குணம் தான்.
அவள் செய்த சிறு சிறு நல்லவிசயத்தை பலர் பாராட்டி வந்ததால் அவளால் இன்றுவரை வாழமுடிந்தது.

தெய்வி ஒரு விசயத்தை நன்றாக புரிந்து கொண்டாள் “ பாராட்டுதல் “ மட்டும் தான் ஒருவரை நல்ல விசயத்தை பற்றி யோசிக்கவைக்கும், செயல் படுத்த வைக்கும். மற்றவருடைய நிறைகளை மட்டுமே தெரிந்து அவர்களை பாராட்ட கற்றுக்கொண்டாள், தன் பிள்ளைகளுக்கும், நண்பர்களுக்கும், பாராட்டுதலின் மகத்துவத்தை பற்றி எடுத்துரைத்தாள் ,
தானும், தன்னை சுற்றி இருப்பவர்களும் வாழ்வின் நிம்மதி,
சந்தோசம் அடைய, “ பாராட்டுதல் ” என்ற ஒற்றை சொல் மாற்றி விடுகிறது.

நாம் ஒருவருடைய செயலை பாராட்டி அதில் அவர் ஆர்வம் அடைந்து இன்னும் சில வெற்றிகள் , நற்செயல்கள், செய்வதை தெய்வி நேரடியாக கண்டு மகிழ்ந்தாள்.
தெய்வி மனம் ஒரு திருப்தி அற்ற நிலையிலேயே இருக்கும்.

தெய்வி மனதில் ஒரு கேள்வி எழுந்தது?

ஏன் வாழ்கிறோம்?

நாம் இந்த உலகத்தில் எதற்காக வாழவந்தோம்?
நாம் பிறந்தோம், வளர்ந்தோம், வாழ்ந்தோம், இறந்தோம், இதற்காகவா நாம் படைக்கப்பட்டோம். நாம் எதாவது படைக்கவேண்டாமா ?

" நாம் படைக்கப்பட்டதே நாம் எதாவது படைப்பதற்காகத்தான் "

ஏன் ? நமக்கு இத்தனை நாட்களாக இது தோன்றவில்லை.
காரணம் புரியவில்லை, நமக்கான பக்குவநிலை இப்பொழுது தான் வந்திருக்கிறது. என்று, தெய்வி புரிந்து கொண்டாள்.

" நாம் நம் குடும்பத்திற்காக உழைத்தால் அது கடமை, அதுவே மற்றவருக்காக உழைத்தால் அது கருணை "

" நாம் இதுவரை வாழ்ந்தது வாழ்க்கை இல்லை இனிமேல் வாழ்வது தான் வாழ்க்கை " என்பதை புரிந்துகொண்டாள் .

எத்தனையோ குழந்தைகள் படிக்கச் வசதி இல்லாமல் இருக்கிறார்கள் நாம் ஒரு குழந்தையை படிக்கவைத்தால் அந்த குழந்தை படித்து வளர்ந்து வளர்ச்சி அடைந்து , அந்த குழந்தை இரண்டு குழந்தையை படிக்கவைத்து வளர்ச்சி அடைய செய்யும்.

இந்த நிலை தொடரும், “ நாட்டில் அனாதை என்ற பேச்சுக்கே இடம் இல்லாமல் போகும் ”
இதை புரிந்துகொண்ட தெய்வி

" நமக்கான படைப்பு இது தான் என்று முடிவு எடுத்தாள் "....
தன் வருமானத்தின் 1/4 பகுதி, தன் படைப்பிற்காகவும்,
3/4 பகுதி, தன் குடும்பத்திற்காகவும் பிரித்து வைத்தாள்.
தெய்வி யின் மனதில் ஒரு புத்துணர்வு ஏற்பட்டது .

" வெகுளி குணம் கொண்ட தெய்வி விவேகமாக நடக்க ஆரம்பித்தாள் "
"நிம்மதியை தேடி அலையும் மனமே, உனக்கான படைப்பு என்னவென்று தெரிந்து செயல்படு "......

இப்படிக்கு

வெகுளி பெண்ணின் விவேகம்.
,

எழுதியவர் : (7-Oct-20, 3:16 pm)
சேர்த்தது : இரா தெய்வானை
பார்வை : 267

மேலே