குருட்டு குரு

குருட்டு குரு
தூங்கிசை ஒருவிகற்ப நேரிசை வெண்பா
அருவே பரமாம் பெருங்குரு ஆகும்
உருவாம் குருவும் உலகில் -. குருடன்
குருவென நாமும் குருடு இரண்டு
குருடும் குழிவிழும் பாரு
உருவமில்லா கடவுளே நம்முடைய பெரிய குருவாகும். ஆனால் உலகி ல் நமக்கு
ஆசிரியரான குருவென்பார் உருவமுடையவர். நாமே படிப்பில்லாத குருடர்
நம்முடைய குருவானவரும் படிப்பறிவில்லாத (முகத்திரண்டு புண்ணு டையார்)
குருடர் எனின் இரண்டு குருடர்களும் சரியான வழியில் போகாது குழியில் வீழ்ந்து
மடிவார்கள் என்ற கருத்தாம்
Xx
.