கிரிக்கெட் உலகின் கோ நீ

விண்மீன் தோன்றும் பரந்த
விண்ணில் !
முதல்முறை முளைத்தது ராஞ்சி
மண்ணில் !

ஏழை வீட்டு வாலிபன்
அன்றாடம் கஞ்சிக்கு உழைப்பான் !
இவனோ ரஞ்சிக்கு உழைத்தான் !

யாரும் பெயர் அறியா
இளைஞன் நீ - அன்று !
உன் பெயர் சொல்லாத
இளைஞனே இல்லை - இன்று !

புயலுக்கு பின் அமைதி
என்பது பழமொழி !
அமைதிக்கு பின் அதிரடி
உன் தனிவழி !

ஏழு கடல் தாண்டி
வந்து மைதானத்தில் அமர்வது
ஏழாம் எண் ஜெர்சியை
பார்க்கத்தானே !

தீப ஒளியில் கண்ட
வான வேடிக்கை கொஞ்சம் !
மைதானத்தில் நீ நிகழ்த்திய
வான வேடிக்கையை கண்டது
வான் அளவை மிஞ்சும் !

தோணி என்றால் படகு
என்பர் - ஆம் !
கிரிக்கெட்டில் இந்தியாவை கவிழாமல்
கரை சேர்த்த தோனி !

நீ சச்சின், லாரா
சாதனைகளை உடைக்க நினைக்கவில்லை !
இளம் வீரர்களின் சோதனைகளை
உடைக்க நினைத்திருந்தாய் !

பலகோடி இளைஞர்களுக்கு முன்னோடி !
அமைதியை பிரதிபலிக்கும் கண்ணாடி !
தலைமை பண்பின் அங்காடி !
இலட்சம்கோடி ரசிகர்கள் உன் பின்னாடி !

உன்னால் உருவான வீரர்கள்
இந்திய அணியில் !
இதனால் தேசம் நனைகிறது
இன்சொல் மழையில் !

நீ ஓய்வு பெறுகிறாய் !
நீ ஓய்வு பெறுகிறாய்
கிரிக்கெட்டில் !
நிரந்தரமாக இடம் பிடிக்கிறாய்
பல கோடி இளநெஞ்சில் !

மட்டை பந்தில் அனுபவத்தை
அடைத்திருக்கும் கோணி !
மைதானத்தில் ஹெலிகாப்டர் ஓட்டும்
விமானி !

கிரிக்கெட் உலகின் முடிசூடா
கோ நீ !
நெஞ்சுக்குள் குடியிருக்கும் எங்கள்
தோனி !

- சௌ.போவாஸ்ராஜன் பொற்செழியன்

எழுதியவர் : சௌ.போவாஸ்ராஜன் பொற்செழிய (8-Oct-20, 5:08 pm)
சேர்த்தது : boazrajan p
பார்வை : 38

மேலே