அறிவுக்கு தவறென

காதளவுக்கு வாயை வளர்த்துக் கொண்டு தினமும்
காலணாவுக்கு பொறாத கற்பனைக் கதைகள் பேசி
அவிச்ச முட்டையை அடைகாக்கும் வித்தையைக்கற்று
அடுத்தவர் மனத்தை ஊனமாக்கும் வார்த்தைகளால்
நொடிக்கொருதரம் நோண்டி நுரைதள்ள வைத்து
அனைத்தும் தெரிந்தார்போல் ஆசிர்வதிக்கும்
அடர் அறிவு மங்கிய கொடையின் கீழ் வாழ்ந்து
எங்கு அடி பட்டாலும் காலை நொண்டும் நாய் போல்
தீமையை ஏற்று திரவியம் குவித்து வாழ்வேன்
என்றாயோ
நெருப்பால் நெஞ்சினை ஆழ பொசுக்கி துன்பம் ஈனினும்
நீரினுள் ஆழ அமுக்கி அதிர்ச்சி வைத்தியம் அளிப்பினும்
தீயதைக் கண்டால் திரும்பி சென்று மெளனிப் பேனென நினைத்தாயே
அஞ்சாது அறிவுக்கு தவறென நினைத்ததை எதிர்ப்பேன்.
-------- நன்னாடன்

எழுதியவர் : நன்னாடன் (8-Oct-20, 7:16 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 38

மேலே