கானகக் கன்னி tribal girl
கானகக் கன்னியின் கைகளில் புள்ளிமான் குட்டி
வண்ணமலர் பூங்கோதை அவள் கட்டி அணைத்திட
மருண்ட அம்மான் குட்டியின் கண்கள் அழகா
இல்லை அதைக் கட்டி அணைத்திடும் இம்மானின்
வில்லாம் புருவத்தின் கீழ்காணும் கண்கலழகா
என்று நினைத்து நான் அவள் கிட்டே போக
மருண்ட கன்னியின் கைகளில் இருந்து மான்
துள்ளி ஓடிட அதன் பின்னே கன்னியும்
துள்ளி ஓட அந்த புள்ளி மானின் துள்ளலை
விஞ்சியதே இவள் துள்ளல் என்று எண்ணவைத்தது என்னை
அந்த அழகுக்கு கன்னியைக் காண என்மனமும் நாட
அவளோ அந்த புள்ளிமானுடன் எங்கோ மறைந்தாள்
கானகத்தில் கனவுலகு கன்னி போலவே அவள்