வானவில்லின் வர்ணம்

வானவில்லின் வர்ணம்.
ஏழு சீர் விருத்தம்

ஒன்று கூடி வாழ்த லிங்கு ஓங்கி டாது சொல்லக்கேள்
இன்று கண்ட வான வில்லும் நீடிக் காது போயிற்றே
நன்று நின்ற தென்ற ஏழு வண்ண மெங்கு போயிற்று
சொன்ன சொல்லை யேற்றி டாத ஓங்கு வில்லும் பொய்யாமே

மனிதர் ஒற்றுமை நடிப்பாம் கலிகாலத்தில் ஒற்றுமைக்கு இடமே கிடையாது. புழு கூட
சண்டைபோடும். ஒற்றுமையான ஏழு வர்ணப் பட்டையான வானவில் 10 நிமிடம் கூட
நீடித்து நிற்காது கலைந்து போகிறது. உண்மையில் ஒற்றுமை என்பது பொய்யான உண்மை.


..

எழுதியவர் : பழனிராஜன் (16-Oct-20, 10:46 am)
சேர்த்தது : Palani Rajan
Tanglish : vaanavillin varnam
பார்வை : 121

மேலே